"வக்கிரப் புத்தி" இளங்கோவன் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா?.. தமிழிசை சவால்
சென்னை: பிரதமர் மோடியை கொச்சைப்படுத்துகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார். என்னைக் கொச்சைப்படுத்துகிறார். தனது கட்சியைச் சேர்ந்த விஜயதாரணியைக் கொச்சைப்படுத்தினார். வக்கிரப் புத்தி கொண்டவராக அவர் இருக்கிறார். நாகரீகத்தை பாஜகவிடமிருந்து அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியதைக் கிண்டல் செய்து பேசியிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து தமிழிசே பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க மறுத்தது அமெரிக்கா. ஆனால் இப்போது அதே அரசாங்கம் சிவப்பு கம்பள வரவேற்பு மட்டும் அல்ல அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி பேசியபோது 66 முறை எம்.பி.க்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற பிரதமர் மோடியை கொச்சைப்படுத்துகிறார் இளங்கோவன்.
என்னையும் கொச்சைப்படுத்தி விமர்சித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகாரர்கள் மட்டுமின்றி அவர்கள் கட்சியை சேர்ந்த விஜயதரணியையும் இளங்கோவன் கொச்சைப்படுத்தி உள்ளார். பெண்கள் பற்றி அவரிடம் வக்கிரப்புத்தி இருக்கிறது. நாகரீக அரசியலை அவர் எங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழிசை என்ற பெயரை தமிழ் இசையா? வசையா? என்று விமர்சிக்கிறார். எனக்கு நல்ல பெயரும் இருக்கிறது. அரசியலிலும் நல்ல பெயர் இருக்கிறது.

கண்டெய்னர் பணத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கமிஷன் வாங்கியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இளங்கோவன் கூறி வருகிறார். கண்டெய்னர் பணத்தில் கமிஷன் வாங்கி கட்சி நடத்தும் நிலையில் நாங்கள் இல்லை. ஒரு வேளை இளங்கோவன் காங்கிரஸ் ஆட்சியில் இப்படி பணம் நடமாடவில்லையே. நாம் கமிஷன் அடித்து இருக்கலாமே என்று நினைத்து இருக்கலாம்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக. முதுகில் ஏறி குறைந்த வாக்கு சதவீதத்தை காங்கிரஸ் தக்க வைத்து உள்ளது. இரட்டை இலக்கத்தில் போட்டி போட்டு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பல நகராட்சிகளையும், மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம். காங்கிரஸ் தனித்து நிற்க முடியுமா? என்று நான் சவால் விடுகிறேன். என்னை விமர்சித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நீங்களும் தனியாக நில்லுங்கள். உங்களுக்கு என்ன கிடைத்து விடும் என்பதைப் பார்த்து விடுவோம் என்றார் தமிழிசை.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications