தமிழிசையின் விருகம்பாக்கத்தில் "தாமரை" மலர்வது டவுட்டுதான்... நக்கீரன் சர்வே!
சென்னை: தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தான் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில் வெல்வது மிகப் பெரிய கஷ்டமான காரியம் என்று நக்கீரன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
விருகம்பாக்கம் தொகுதியில் தற்போது தேமுதிகவின் பார்த்தசாரதி உறுப்பினராக இருக்கிறார். விஜயகாந்த்தின் வீடும் இப்பகுதியில்தான் உள்ளது. இந்த நிலையில், இம்முறை அங்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார். இதனால் அந்தத் தொகுதி விஐபி தொகுதியாகி விட்டது.
இதுவரை விஜயகாந்த் வீடு உள்ள தொகுதி என்று மட்டுமே அறியப்பட்டு வந்த விருகம்பாக்கம் (அதற்கு முன்பு 9 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் வாழ்ந்த பகுதி என்று இப்பகுதிக்குப் பெயர் இருந்தது) இப்போது தமிழிசை போட்டியிடும் விருகம்பாக்கம் என்று பெயர் மாறியுளளது.

தமிழிசைக்கு சாதகமில்லை...
இத்தொகுதியில் நக்கீரன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழிசைக்கு சாதகமான செய்தி இல்லை. கடந்தமுறை இலைக் கூட்டணியில் வெற்றிபெற்ற சிட்டிங் தே.மு.தி.க. பார்த்தசாரதியிடம், பழைய வேகம் தென்படவில்லை. கூட்டணி பலமும் அவருக்கு இங்கே கைகொடுக்கவில்லை.

பிரச்சாரம்...
ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவரான தமிழிசை, தங்கள் பவர் மத்தியில் இருக்கும் தோரணையில், தொகுதிக்கு அதைக் கொண்டு வருவேன், இதைக் கொண்டுவருவேன் என்று பலவற்றையும் பட்டியலிடுகிறார்.

நீயா... நானா...
வாக்காளர்கள் இதை கவனித்தபோதிலும், இது மாநில அரசியல் என்பதால், டாக்டரான தமிழிசையின் பல்ஸ் ரேட் பற்றி, கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே அ.தி.மு.க வேட்பாளர் விருகை ரவிக்கும் தி.மு.க. தனசேகரனுக்கும் இடையில்தான் நீயா நானா? யுத்தம் பலமாக நடக்கிறது.

தாமரை மலராது...
ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியாலும், சொந்தக்கட்சி பலத்தாலும் திமுக தரப்பு தனசேகரன் பக்கம் இப்போதைக்கு வெளிச்சம் தென்படுகிறது. எனவே தமிழிசையின் தடாகத்தில் தாமரை மலர்வது சிரமம். சின்னதாக மொட்டு விடலாம், அவ்வளவுதான் என்று நக்கீரன் கூறுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications