விஜயகாந்த் தலைமையில் கூட்டணி.. பிரேமலதா அழைப்பு குறித்து பரிசீலிப்போம்: தமிழிசை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளது குறித்து பரிசீலிப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தேமுதிகவை பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற செய்ய தீவிரமாக முயற்சித்தது. ஆனால் தேமுதிகவோ தனித்துப் போட்டி- விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதனால் திமுகவுக்கான கதவுகளை தேமுதிக சாத்திவிட்டது. அதே நேரத்தில் பிற கட்சிகள் 'வந்து பேசலாம்' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் வந்து பேசலாம் என்ற பிரேமலதாவின் அழைப்பை பரிசீலிப்போம்.
பிரேமலதாவின் அழைப்பு குறித்து பாஜகவின் தமிழகம், மத்திய நிர்வாகிகள் விவாதிக்க இருக்கிறோம். எதிர்காலத்தில் தேமுதிகவுடன் இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைத்தால் அது குறித்து ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம்.
திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications