ரஜினி, கமல் என்ன?- பாஜகவிலும் சூப்பர் ஸ்டார், உலகநாயகன் உள்ளனரே- தமிழிசை புது விளக்கம்

பாஜகவை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி, உலக நாயகன் அமித்ஷா என பாஜக தமிழக தலைவர் தமிழிசை விளக்கம் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: பாஜகவை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி என்றும் உலக நாயகன் அமித்ஷா என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை விளக்கம் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் புதிய கட்சியை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபோல் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதாக கூறி, கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பிரபலம்

பிரபலம்

இவர்கள் இருவரையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. மேலும் படங்களில் நடித்து பிரபலமானதாலேயே அரசியலுக்கு வருகிறார்கள் என்றும் விமர்சனம் செய்தனர்.

பாஜகவின் உலக நாயகன்

பாஜகவின் உலக நாயகன்

இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சிவகாசியில் கூறுகையில், பாஜகவை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி; உலக நாயகன் அமித்ஷா. ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.

தமிழகத்தில்

தமிழகத்தில்

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் முடிவு கட்டினர். அதுபோன்ற அரசியல் மாற்றம் தமிழகத்திலும் ஏற்படும்.

வெற்றிடம்

வெற்றிடம்

திமுகவுக்கே தலைவராக முடியாத ஸ்டாலின் எப்படி தமிழகத்தின் முதல்வராக முடியும்? தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜகவால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+