ஜெ. சிகிச்சை குறித்து ஏன் இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க ஓபிஎஸ்? கேட்கிறார் தமிழிசை
ஜெயலலிதாவின் மரணம் குறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாற்றி மாற்றிக் கருத்துக் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி கருத்துக் கூறி வருவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து 75 நாட்கள் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் முன்பு ஒருமுறை கூறுகையில், ஜெயலலிதாவை மேல்நாட்டுக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்லுமாறு தம்பிதுரையிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். ஆனால், அதனை சசிகலா குடும்பத்தார் தடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதாவை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் தடுத்தார் என கூறியுள்ளார்.
இவ்வாறு, ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஓ.பன்னீர் செல்வம் மாற்றி மாற்றி கருத்துக் கூறி வருவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழைசை கூறியுள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தபோது, முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications