கைதி சசிகலாவை அமைச்சர்கள் பார்ப்பது நல்லாவா இருக்கு.. தமிழிசை பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சிறையில் இருக்கும் கைதியை பார்ப்பது ஆரோக்கியமானது அல்ல. சட்ட விதிகளின்படி முரணானது. ஆனால் தமிழக அமைச்சர்கல் போய்ப் பார்த்து வந்துள்ளனர் என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பெங்களுரு சென்று, சிறையில் இருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை பார்த்து வந்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.

Tamilisai slams TN Ministers for visiting Sasikala

சட்ட விதிகளின்படி முரணானது. அவர்கள் எடுத்திருக்கும் பதவிப்பிரமாண உறுதிமொழிக்கு எதிரானது. இந்த நடவடிக்கைகளை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்துப் பேசியது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள பொதுமக்களின் சந்தேகங்களை போக்குவது அவசியம். அது அதிமுக அரசின் கடமையாகும் என்று தமிழிசை கூறினார்.

ஊழல் குற்றம் செய்து விட்டு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை சசிகலா அனுபவித்து வருகிறார். கைதி சசிகலாவை பெங்களூரு சிறைக்குப் போய் சமீபத்தில் நான்கு அமைச்சர்கள் பார்த்து விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+