இலக்கியச் செல்வரின் மகள் பாஜக தலைவராகியிருப்பது மகிழ்ச்சி - கருணாநிதி
சென்னை: தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு எனது வாழ்த்துகள்..!
பா.ஜ.க வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக, என்னுடைய அருமை நண்பர், இலக்கிய செல்வர், குமரி ஆனந்தனின் மகள், தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருக்கின்ற செய்தியினை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் அகில இந்திய பா.ஜ.க வின் தேசிய செயலாளராக எச்.ராஜாவும், தேசிய செய்தித் தொடர்பாளராக லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது.
பா.ஜ.க வின் வளர்ச்சிக்காக நீண்ட நாட்கள் பாடுபட்ட அவர்களுக்கு உரிய நேரத்தில் மேலும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவே கருதிகிறேன். அவர்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி வாழ்த்தியுள்ளார்..












Click it and Unblock the Notifications