தலைமை செயலகத்தில் தமிழிசை- மகன் திருமண அழைப்பை ஜெ.விடம் வழங்கினார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்து மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
தமிழிசை சவுந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்கவுள்ளது.

இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த திருமண விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அழைப்பு விடுத்து வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.
இதேபோல் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தமிழிசை சவுந்தரராஜன் இன்று குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.
அப்போது தாம் பிரதமர் மோடி குறித்து எழுதிய புத்தகத்தை ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசாக தமிழிசை வழங்கினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications