கிழிந்த சட்டை, இல்லாவிட்டால் கருப்பு சட்டை: இதுதானே ஸ்டாலினின் பழக்கம்- தமிழிசை தாக்கு
கிழிந்த சட்டை இல்லாவிட்டால் கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு செல்வதுதானே ஸ்டாலினின் பழக்கமாக உள்ளது என்று தமிழிசை விமர்சனம் செய்தார்.
சென்னை: கிழிந்த சட்டையோ அல்லது கருப்பு சட்டையோ அணிந்து கொண்டு சட்டசபைக்கு செல்வதுதானே ஸ்டாலினின் பழக்கமாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இன்று 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி சட்டபைக்கு வந்தனர்.

இதனிடையே மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் தினகரன் தொடங்கிய அமைப்பு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கிழிந்த சட்டை இல்லாவிட்டால் கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு செல்வதே ஸ்டாலினின் பழக்கமாக இருக்கிறது.
உருப்படியாக எதையும் செய்யாத ஸ்டாலின் சட்டை செய்ய தேவையில்லை என்றார் தமிழிசை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்தது. அப்போது அங்கு நடந்த தள்ளுமுள்ளுவில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. இதைதான் தமிழிசை தற்போது நினைவுப்படுத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications