பாஜகவின் கைப்பாவை அதிமுகவா? ஆதாரம் கொடுங்க... ஆதாரம் கொடுங்க.. அலறும் தமிழிசை!
அதிமுக அரசு, பாஜகவின் கைப்பாவை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக அ.தி.மு.க., பாஜக கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி வருகிறார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு கூறுவது தவறானது.

மாநிலத்தில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு இதற்கு ஒத்துழைப்பு தருகிறது. அரசியல் உறவு என்பது வேறு. அரசு சார்ந்த உறவு என்பது வேறு. மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவு வெற்றியே. சில எதிர்க்கட்சிகள் கூறுவது போல தோல்வி இல்லை. காரணம் இந்த 3 ஆண்டில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
கருப்பு பண ஒழிப்புக்கு பின்பு பல மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று உள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுவதற்குத் தடை என்று சிலர் கூறுகின்றனர். மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. அது விலங்குகளுக்கு பாதுகாப்பு, மாட்டிறைச்சி விற்பனை ஒழுங்குமுறை ஆகும். யாரையும் மாட்டு இறைச்சியை சாப்பிடக் கூடாது என்று கட்டாயப்படுத்தவில்லை, தடுக்கவில்லை, கெடுக்கவும் இல்லை.
நல்லமுறையில் ஒரு அரசு போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்க்கத் தெரியாத எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications