வட மாநிலம், தென் மாநிலம் என பாகுபாடு பார்த்து பிரதமர் நிதி ஒதுக்குவது இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பிரதமர் நிதி ஒதுக்கும்போது வட மாநிலம், தென் மாநிலம் என்று பார்த்து ஒதுக்குவது இல்லை. சேதத்திற்கு ஏற்ப தான் நிதி ஒதுக்குகிறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவினர் சுத்தம் செய்து வருகிறார்கள். சென்னை தியாகராயநகர் சாலைகளில் பாஜகவினர் வியாழக்கிழமை சுத்தம் செய்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு, துணை தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தெருக்களை சுத்தம் செய்தனர்.
அதன் பிறகு தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாஜக சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வருகிறோம். இன்று சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை நகர சாலைகளை சுத்தப்படுத்துகிறோம். சென்னையில் தொற்றுநோய் பரவாமல் இருக்கவே நாங்கள் சாலைகளை சுத்தம் செய்கிறோம். பொது மக்களும் சாலைகளை சுத்தம் செய்ய முன் வர வேண்டும்.
பிரதமர் நிதி ஒதுக்கும்போது வட மாநிலம், தென் மாநிலம் என்று பார்த்து ஒதுக்குவது இல்லை. சேதத்திற்கு ஏற்ப தான் நிதி ஒதுக்குகிறார். தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் பற்றி அறிந்த உடன் பிரதமர் நிவாரண நிதியை அறிவித்ததோடு மீட்பு பணிகளில் ஈடுபட முப்படைகளை அனுப்பி வைத்தார். மேலும் அவரே நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மாநிலத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த, வங்கிகள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட அவர் உத்தரவிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து தான் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதை அரசியல் கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications