லாரி ஏற்றிக் கொல்வோம்.. தமிழிசைக்கு எஸ்.எம்.எஸ்சில் வந்த மிரட்டல்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் கொலைமிரட்டல் வந்துள்ள நிலையில், பாதுகாப்பு எதையும் தான் கேட்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
தமிழகத்தில் பல முனை அரசியல் போட்டி ஏற்பட்டாலும், ஏற்பட்டது, தேர்தல் களம், கொலைக்களம் போன்ற தோற்றத்தை உருவாக்க தொடங்கியுள்ளது.
திருவாரூரில் வைகோ மீது திமுகவினர் தடிகளாலும், கற்களாலும் தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜக தலைவர் தமிழிசைக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டி
சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

கார் ஏற்றுவதாக மிரட்டல்
இந்நிலையில், தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கார் மீது லாரி ஏற்றிக் கொன்று விடுவோம் என எஸ்.எம்.எஸ் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பின்வாங்க மாட்டேன்
இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுத்த இந்த கொலை மிரட்டல் குறித்து, நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் என் பணிகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

சந்தேகம் இல்லை
தனிப்பட்ட முறையில் எனக்கு யார்மீதும் எனக்கு சந்தேகம் இல்லை. கொலை மிரட்டால் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்கமாட்டேன். கொலை மிரட்டல் விடுத்தவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்கள் மீதான பாதுகாப்பில் தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஆலோசனை
மிரட்டல் குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications