“ஒரு வரலாறு முடிந்துவிட்டது”... கருணாநிதி உடலுக்கு தமிழிசை நேரில் அஞ்சலி
கருணாநிதி உடலுக்கு தமிழிசை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு பிற மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "கருணாநிதி மரணத்தால் ஒரு வரலாறு முடிந்து விட்டது. தமிழக அரசியல் வரலாறு இனி இப்படி ஒரு தலைவரைப் பார்க்குமா என்பது சந்தேகமே.
கருணாநிதியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, ஒரு வாரம் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுகவுடன் சேர்ந்து பாஜகவும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications