விஜயேந்திரர் விவகாரம்.. எனக்கு தெரியாது என எஸ்கேப்பான தமிழிசை!
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததராஜன் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிச்சென்றார்.
Recommended Video

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததராஜன் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிச்சென்றார்.
எச் ராஜாவின் தந்தையான மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.
விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார்.

ஸ்டாலின் கண்டனம்
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜயேந்திரரின் நடவடிக்கைக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏன் தெரியுமா நிற்கவில்லை?
விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்கவில்லை என காஞ்சி சங்கரமடம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

எனக்கு தெரியாது
அப்போது விஜயேந்திரர் விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என கூறிய அவர் விஜயேந்திரர் குறித்து பதிலளிக்க மறுத்து விட்டார்.

பார்த்துவிட்டு சொல்கிறேன்
எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிப்பரப்படுவதாக கூறிய செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு தான் இன்னும் அதனை பார்க்கவில்லை என தமிழிசை பார்த்துவிட்டு சொல்கிறேன் என கூறிச் சென்றார்.

சிறுமை சேர்ந்துவிட்டது
இதனிடையே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் சிறுமை சேர்த்து கொண்டதாக மதுரை ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications