இன்று சூரப்பாவை எதிர்க்கும் சூப்பர் ஸ்டாரே! அன்று உங்களை தமிழக மக்கள் எதிர்த்திருந்தால்... தமிழிசை
காவிரி நீரை கொண்டு வர தாமதம் ஏற்படும் என்பதால் ஸ்டாலின் சிறையிலேயே இருக்கட்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட சூரப்பாவை எதிர்க்கும் ரஜினியை அன்று தமிழக மக்கள் எதிர்த்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று பாஜக தேசிய தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5-ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நேற்று தஞ்சையில் பேசிய ஸ்டாலின், காவிரி கிடைக்க வேண்டும் என்றால் விவசாயிகளுக்காக நாங்கள் வாழ்நாள் முழுவதும் சிறைக்கு செல்ல தயார் என்று கூறியிருந்தார்.

பாஜகதான்
இதுகுறித்து சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் காவிரி விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டுதான் ஸ்டாலின் கைதானார், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்துக்கு கொண்டு வர முடியாத காவிரியை பாஜகதான் கொண்டு வரும்.

சிறையில் இருங்கள்
காவிரியை கொண்டுவர கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே ஸ்டாலின் அதுவரை சிறையில் இருக்க வேண்டும். இத்தனை ஆர்ப்பாட்டம் , போராட்டம் , நடைபயணம் நடத்தும் ஸ்டாலின், தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கூறும் சித்தராமையாவை கண்டித்து பேசியதுண்டா. தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறார் ஸ்டாலின்.

ரஜினிகாந்த் கருத்து
துணைவேந்தர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பிக்கலாம் என அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தின்படியே துணைவேந்தர் சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்தது சரி அல்ல என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சத்யராஜுக்கு கண்டனம்
40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா? ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்று காவிரி போராட்டத்தில் சத்யராஜ் கூறுகிறார். ஐடி ரெய்டு வந்தால் சத்யராஜ் எப்படி பயப்படுவார் என தெரியும் என்றார் தமிழிசை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications