For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாபா முத்திரையில் தாமரை நீக்கப்பட்ட விவகாரம்... தமிழிசையின் விளக்கத்தை கேட்டீங்களா மக்களே?

பாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கப்பட்ட விவகாரத்தை பெரிதாக கேட்கிறார்கள், தாமரை ஒன்றும் அவமானப்படுத்தும் சின்னமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியின் பாபா முத்திரையில் தாமரை நீக்கம், தமிழிசை விளக்கம்...வீடியோ

    திருவாரூர் : தாமரை ஒன்றும் அவமானப்படுத்தும் சின்னமல்ல, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாபா முத்திரையில் இருந்து தாமரை சின்னம் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின் முழு முதற் காரணியே பாஜக தான் என்று தமிழக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய பாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தில் பாபா முத்திரை மற்றும் பாம்பு மட்டுமே இடம்பெற்றிருந்தது, இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

    இந்நிலையில் இது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது : சகோதரர் ரஜினி ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்றார். இதனால் நாங்கள் அவரை வரவேற்றோம்.

    மற்ற கட்சிகளிடம் கேட்கப்படுகிறதா?

    மற்ற கட்சிகளிடம் கேட்கப்படுகிறதா?

    உடனே அவருடன் கூட்டணி வைப்பீர்களா, கூட்டணி பிரச்சாரமா, பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது, பாஜக மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது என்றெல்லாம் பேசப்படுகிறது. ரஜினி பாஜக உறவு குறித்து உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.
    இதெல்லாம் என்னவென்றே புரியவில்லை, மற்ற கட்சிகளைப் பார்த்து இப்படித் தான் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவா. அவரவர்களின் செயல்பாடுகளை விட்டுவிட்டு ஒரு சின்ன நகர்வு வந்தவுடன் தொடர்ந்து யூகங்களையே மற்றவர்கள் கொண்டு வந்துகொண்டிருக்கக் கூடாது.

    தாமரை சின்னம் காணவில்லை

    தாமரை சின்னம் காணவில்லை

    பாஜகவை பொருத்தவரை நேர்மையான நேர்மறை அரசியலை நாங்கள் முன் நிறுத்த வேண்டும் என நினைக்கிறோம். தாமரை சின்னம் ரஜினியின் முத்திரையில் இருந்தது அதைக் காணவில்லை என்று இப்போது புதிதாக ஒன்றை கிளப்புகிறார்கள்.

    தாமரை அவமானப்படுத்தக் கூடிய சின்னமல்ல

    தாமரை அவமானப்படுத்தக் கூடிய சின்னமல்ல

    அது ரஜினியின் விருப்பம் அவர் என்ன முத்திரை கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்பார். அப்படி ஒன்றும் தாமரை அவமானப்படுத்தக் கூடிய சின்னம் கிடையாது. அவரவர்களுக்கு விருப்பம் குழப்பம் வந்துவிடக் கூடாது என்று கூட அவர் அப்படி செய்திருக்கலாம்.

    ஏற்க முடியாத கருத்து

    ஏற்க முடியாத கருத்து

    ஆனால் தாமரை சின்னம் நீக்கப்பட்டதால் ஏதோ பாஜகவிற்கு பின்னடைவு வந்துவிட்டதைப் போல அரசியல் கட்சியினர் பேசுவதை ஒப்புகொள்ள முடியாது. ரஜினி செய்வுதாக சொல்லியுள்ள ஆன்மிக அரசியலை பாஜக ஏற்கனவே செய்து வருகிறது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu BJP state president Tamilisai soundarrajan says Lotus removed from Rajini's Baba symbol is his own wish on that there is no setback for BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X