மீனவர் பிரச்சினையில் பாஜகவை இழுக்க இளங்கோவன், வாசனுக்கு "ரைட்ஸ்" இல்லை- தமிழிசை
சென்னை: மீனவர் பிரச்சினையில் பாஜகவினைக் குற்றம் சாட்டுவதற்கு ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகிய இருவருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சென்னை கமலாலயத்தில் நேற்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், "எல்லா பிறந்தநாளையும் விட இந்த ஆண்டு மகாகவி பிறந்தநாள் தமிழக மக்களுக்கு இன்னும் மனநிறைவை கொடுக்கிறது. ஏனென்றால் சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் நம் தேசியகவியின் பிறந்தநாளை தமிழக மக்கள் மட்டுமே கொண்டாடி கொண்டு இருந்தோம்.
ஆனால் இன்று வடஇந்திய மக்களும், அங்கு படிக்கும் பள்ளிக்குழந்தைகளும் கொண்டாடுகின்ற அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏற்பாட்டை பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியில் ஆளும் ஆட்சி தமிழுக்கு எதிரான ஆட்சி என்ற பொய் குற்றச்சாட்டு மறுக்கும் அளவுக்கு தமிழ் புலவர்களின் பிறந்தநாள் வடஇந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
வங்கிகளில் நேரடி மானியம் போடப்படும் திட்டம் நல்ல திட்டம் ஆகும். ஆனால் இங்கே உள்ள கேஸ் ஏஜென்சி அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கவனக்குறைவால் பொதுமக்கள் குழப்பமடைந்து, துன்பப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் முறையாக விண்ணப்பம் கொடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறோம்.
தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது உண்மை தான். ஏற்கனவே தூக்கு கயிறுக்கு அருகில் சென்ற 5 மீனவர்கள் மீட்டிருக்கிறோம். இப்போது கைது செய்யப்படுபவர்கள் எல்லை தாண்டுவது உள்பட வெவ்வேறு காரணங்களுக்கு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களை மீட்பதற்கும் வெளியுறவுத்துறை உடனே முயற்சிகளை மேற்கொள்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய இருவரும் மீனவர் பிரச்சினையில் பா.ஜ.க.வை குறைகூறுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

ஆழ்கடல் மீன்பிடிப்பு முறையை செயல்படுத்த மத்திய அரசுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடி வரை செலவு ஆகும். அதையும் மத்திய அரசே செய்வதற்கு தயாராக இருக்கிறது.
இலங்கையிடம் ஓரளவு தான் அழுத்தம் கொடுக்க முடியும். கட்டளையாக கூற முடியாது. ஆனால் மீனவர்கள் நலனில் தொடர்ந்து மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பாரதி இல்லத்தில் விழா:
முன்னதாக நேற்று பாரதியார் பிறந்த தினத்தையொட்டி திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவிடத்தில் பாஜக சார்பில் விழா கொண்டாடப்பட்டது. பாஜக தலைவர் தமிழிசை தலைமையில் நடந்த இந்த விழாவில் முன்னாள் டிஜிபி நடராஜ், திரைப்பட வசனகர்த்தா கிரேஸி மோகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பாரதியார் சிலையை ஊர்வலமாகவும் வீதி உலா கொண்டு சென்றனர். பெரும் திரளான பாஜகவினர் இதில் கலந்து கொண்டனர்.
-
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க











Click it and Unblock the Notifications