For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தல் நடைபெறலாம்: தமிழிசை

தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்திரராஜன் கூறியதாவது:

மணல் குவாரிகளைப் போல டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். மணல் அதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்புள்ளவர்கள் யாரும் தப்பவே முடியாது.

 திமுக மீது அதிருப்தி

திமுக மீது அதிருப்தி

நிச்சயம் சட்டம் தன்னுடைய கடமையை செய்யும். கருணாநிதி வைரவிழாவுக்கு அனைத்து கட்சியினரையும் திமுகவினர் அழைத்திருக்க வேண்டும்.

 நீட் உதவும்

நீட் உதவும்

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய உதவியை செய்யும் தேர்வாகும். அதனுடைய முடிவு வரும் போது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் அது குறித்து உணர்வார்கள்.

 அரசியல்வாதிகளே காரணம்

அரசியல்வாதிகளே காரணம்

எதற்காக இந்த நீட் தேர்வு என்பது குறித்து தெரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக வேண்டாம் என்று சொல்வதால் அந்த மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து விடும். நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்.

 தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியை பாஜக தொடங்கி விட்டது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

English summary
Bjp TN president Tamilisai Sowndhrarajan urges Chief minister Edappadi Palanisamy to take action on sand quarries in Tamil nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X