தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாஜக ஆதரிக்குமாம் - சொல்வது தமிழிசை
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பீட்டா அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை. மணல் கொள்ளை, கந்துவட்டி, நீர்நிலைகளை தூர்வாரததால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றார். மேலும் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications