சின்னப்பிள்ளத்தனமாவுள்ள இருக்கு... வடிவேலு பாணியில் தமிழிசை ட்வீட்
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பாஜக பெற்றுக்கொடுத்ததாக கூறுவது சின்னப்பிள்ளத்தனமாக இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: இரட்டை இலையை பாஜக வாங்கிக் கொடுத்ததாக திருநாவுக்கரசர் கூறுவது சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக ட்வீட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இரட்டை இலை சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது. ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கே சின்னம், கட்சி, கொடி ஒதுக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றார்

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மனதளவில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் ஜெயலலிதா மறைவிற்கு பின் மோடி, அமித்ஷா ஆலோசனையின் பெயரிலேயே அவர்கள் இணைந்தனர். அப்போதே இந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது தெரியும்.
தற்போது உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த அணியோடு கூட்டணி அமைக்க பஜகவினர் முயற்சிப்பார்கள். இரட்டை இலை பெற்ற அவர்கள் இனி எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார் திருநாவுக்கரசர்.
இரட்டை இலைச்’சின்னம்’பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 24, 2017
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்ச் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இரட்டை இலைச்'சின்னம்'பாஜக வாங்கிக்கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என்று வடிவேலு பாணியில் ட்வீட்டியுள்ளார். வர வர தமிழிசை சவுந்தரராஜனும் தமிழில் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications