போடிநாயக்கனூரில் களமிறங்கும் ஓபிஎஸ்: தேனி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்!
தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் நட்சத்திர தொகுதியை உள்ளடக்கியது தேனி மாவட்டம். இதோ அம்மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதி அதிமுக வேட்பாளர்களின் விபரங்கள்:
போடிநாயக்கனூர்:
அதிமுக பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த முறை போட்டியிட்டு வென்ற போடி நாயக்கனூரில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்பு பெரியகுளம் எம்.எல்.ஏவாக இருந்தவர். சாதாரண டீக்கடை முதலாளியாக - எம்ஜிஆர் ரசிகனாக - அதிமுகவில் உயர்ந்தவருக்கு, இரண்டு முறை அதிமுக சார்பில் தமிழக முதல்வராகவே இருந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
ஆண்டிபட்டி:
தங்க தமிழ்ச்செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். பிரமலைக்கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். தொழில் விவசாயம். 2001-02 ஆம் ஆண்டு வரை ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ, 2003-09 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி., 2011-16 ஆம் ஆண்டு வரை ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ. 1996 இல் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில மாணவரணி செயலாளர், 2002-2011 தேனி மாவட்ட செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர், 2016 மார்ச் முதல் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்
பெரியகுளம் (தனி):
வேட்பாளர் பெயர் டாக்டர்.கா.கதிர்காமு. எம்.பி.பி.எஸ்.,எம்.டி. டாக்டர். தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் பூதிப்புரம். ஜாதி: இந்து அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். அரசு மருத்துவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். அதிமுக மாவட்ட மருத்துவர் அணி தலைவர்.
கம்பம்:
வேட்பாளர் பெயர் எஸ்டிகே ஜக்கையன். கவுடர் வகுப்பைச் சேர்ந்தவர். மதுரையில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் கம்பம் புதுப்பட்டி. படிப்பு - பி.ஏ.பி.பில். 1972-லிருந்து மாவட்ட பிரதிநிதி, 1985 முதல் 96 வரை மதுரை மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளர். 1988 முதல் 89 வரை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர். 2002 முதல் 2009 வரை அதிமுக தொழில் சங்க மாநில செயலாளர். 1982 பெரியகுளம் லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, 1989 -சட்டசபை தொகுதியில் அதிமுக (ஜெ) அணியில் தேனியில் போட்டியிட்டு தோல்வி,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications