கடையநல்லூர் தொகுதி யாருக்கு..? திமுக கூட்டணியில் நிலவும் மும்முனை போட்டி..!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி அப்பகுதியில் பந்தயமே நடந்து வருகிறது.
அந்தளவிற்கு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடுமையான போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என மூன்று கட்சிகளிலும் வெயிட்டான வேட்பாளர்கள் இருப்பதால் மூன்று கட்சிகளுமே கடையநல்லூரில் போட்டியிட விரும்புகின்றன.

கடையநல்லூர் தொகுதி
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் சற்று அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் பலமுறை வென்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் போட்டியிட்டு வென்று தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

யார் யார்?
இதனிடையே வரும் தேர்தலில் கடையநல்லூரில் களமிளங்குவதற்கான களப்பணிகளை கடந்த ஓராண்டுக்கும் மேல் செய்து வருகிறார் அய்யாதுரை பாண்டியன். தொழிலதிபரான இவர் திமுக வர்த்தக அணியில் மாநில பொறுப்பு வகித்து வருகிறார். கடையநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டே தீருவது என்ற முடிவுடன் இவர் காய் நகர்த்தி வரும் நிலையில் காங்கிரஸும் இந்த தொகுதியை கேட்கிறது.

முகமது அபுபக்கர்
பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூரில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் ஸ்டாலினுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் அய்யா துரை பாண்டியனும் நல்ல வேட்பாளர்தான், கொடுத்தால் வெற்றியை உறுதி செய்து கொடுத்துவிடுவார். அதேபோல் ஐ.யூ.எம்.எல். முகமது அபுபக்கரும் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றவர் தான். இவர்களுக்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் பீட்டர் அல்போன்ஸ் மீதும் ஸ்டாலினுக்கு தனி மரியாதை உள்ளது.

தர்ம சங்கடம்
இதில் யாருக்கு வாய்ப்பு என்பது தான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இப்படி திமுக கூட்டணிக்குள்ளேயே மும்முனை போட்டி நிலவி வருவதால் யார் வேட்பாளராக வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே கடையநல்லூர் தொகுதி அரசியல் பிரமுகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications