For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக வேட்பாளர் பட்டியல் 13ம் தேதி வெளியிடப்படலாம்: இல.கணேசன்

|

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வரும் 13ம் தேதி வெளியிடப்படலாம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் அந்தக்கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் பாமக இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tamilnadu BJP’s candidates list to be announced on 13

தொகுதிப்பங்கீடு சாதகமாக அமையும் வேளையில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தொகுதி பங்கீடு சிக்கலுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியை 13-ந்தேதி கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சென்னையில் அறிவிக்க உள்ளார். அதில், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல கணேசன் கூறுகையில், ‘லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வரும் 13ம் தேதி வெளியிடப்படலாம். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தே.மு.தி.க.,விற்கு கூடுதல் இடங்கள் கொடுப்பதற்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Tamilnadu BJP's candidate list for Lok Sabha election to be released by its president Rajnath singh on 13th of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X