For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரியான குறி.. விவசாயத்திற்கு அள்ளிக் கொடுத்த ஓ.பி.எஸ்.. டெல்டா மீது கவனம்..பட்ஜெட்டில் அதிரடி!

தமிழக அரசு சார்பாக இன்று தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் விவசாய துறை தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Budget 2020 | TN Budget focuses on agriculture

    தமிழக அரசு சார்பாக இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் விவசாய துறை தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    தமிழக பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார் துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அவர் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 2021ல் நடக்கும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் நிறைய அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது.

    பட்ஜெட் தாக்கல் செய்தார்

    பட்ஜெட் தாக்கல் செய்தார்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வணங்கி நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். செயல் திறன் மிக்கவர் என்பதை நிரூபித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இடைப்பட்ட இன்னல்களை எல்லாம் உடைத்து எறிந்தவர் ஜெயலலிதா.மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரை பின்பற்றி இந்த அரசு செயல்படுகிறது என்று ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

    விவசாய துறை

    விவசாய துறை

    இந்த பட்ஜெட்டில் விவசாய துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மின்சார துறைக்கு 20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கல்வி துறை

    கல்வி துறை

    கல்வித் துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும்.11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    மானியம் ஏன்?

    மானியம் ஏன்?

    இதற்கான மானியங்கள் அளிக்கப்படும்.திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் டெல்டா மாவட்டங்கள் வேகமாக வளரும். கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Budget 2020 focuses on Agriculture and Delta a lot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X