காவிரி விவகாரம்.. 4வது நாளாக ஒசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பஸ்கள்.. தனியார் பஸ்களில் கூட்டம்
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து காவேரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனால் இன்று கர்நாடகா மாநிலத்திலுள்ள விவசாயிகள் கன்னட அமைப்புகள் மாநில அரசை கண்டித்து தீவிர போராட்டத்தில் குதிக்க உள்ளதால் கர்நாடகா வாழ் தமிழ் மக்கள் மிக அச்சத்துடன் உள்ளனர்.
தமிழக கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் நான்காவது நாளாக காவிரி நீர் திறந்துவிடுவதை எதிர்ப்பு தெரிவித்து போராடுவதால் இரண்டு மாநில போலீசாரும் குவிக்கப்ட்டுள்ளனர்.

காவேரியிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது எனக்கோரி அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமான தமிழகத்திலிருந்து ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டன இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தொடரும் காவேரி போராட்டத்தின் காரணமாக நான்காவது நாளாக இன்று தமிழகஅரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல கர்நாடகா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகா பேருந்துகள் மைசூர் மார்க்கத்தில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் தமிழக பஸ்களோ ஒசூரோடு நிற்பதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் மற்றும் கர்நாடகா பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிககமாக நிரம்பியது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications