ஆளுநர் அளித்த தேநீர் விருந்து... முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருத்தில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்வில்லை.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆளுநர் ரோசய்யா, காலை, 11:00 மணிக்கு, தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பது மரபு.

ஆனால், உடல்நிலை ஒத்துழைக்காததால், முதல்வர் ஜெயலலிதா, தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு, கொடியேற்ற கோட்டைக்கு வரும் வழியில், போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்று, மலர் வளையம் வைத்து, முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். இந்த ஆண்டு, அங்கும் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications