For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது.. ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடியார் இன்று சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தக்கு 330 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவை இன்று சென்னை கொரட்டூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அதிமுக அரசு 2011ல் ஆட்சிக்கு வந்ததும் , ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதற்கு 700 கோடி செலவாகும் என்று தெரிவித்தது. அதனால், பழைய கார்டில் உள்தாள்களை ஒட்டியே, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி வந்தனர்.

Tamilnadu chief minister K.palanisamy inaugurated Smart card plan

இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 330 கோடி செலவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த விழா சென்னை கொரட்டூரில் நடைபெற்றது.

இன்று முதல் ஸ்மார்ட் கார்டு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படிருந்தது. ஆனால், ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி இன்னும் நிறைவடையாத காரணத்தால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் உடனே வழங்க இயலாது என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Tamilnadu chief minister Edappadi k. Palanisamy inaugurated Smart card -ration card plan in Korattur. About 330 cr. rupees spent over this plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X