விவசாயிகள் மகிழ்ச்சி... மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார் முதல்வர் பழனிச்சாமி
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தருமபுரி: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நாடு முழுக்க தற்போது பல மாநிலங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவும், கேரளாவும் இந்த மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.
முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகிக் கொண்டே சென்றது. நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடியாகதான் நீர் வரத்து இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதன்பின்தான் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.53 லட்சம் கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 69.96 டி.எம்.சியாகவும் உள்ளது.

இந்த நிலையில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications