"மாங்கா மண்டையன்" தெரியும்.. "தேங்கா மண்டையன்" யாரென்று தெரியுமா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை:தலையலங்காரத்தில் தனித்துத் தெரிபவர் இலங்கை வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவரது ஹேர்ஸ்டைலுக்கு இதுதான் காரணமாக இருக்குமோ என்று கூறி ஒரு கலகலப்பான படத்தைப் போட்டு காரணத்தையும் விளக்கி ஒரு ஹாஸ்யம்.. வாட்ஸ் ஆப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.

உலக அளவிலுள்ள கிரிக்கெட் வீரர்களிலேயே இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மட்டும் தனித்து தெரிவார். அதில் ஒரு காரணம், சர்ச்சைக்குரிய வகையில் பந்தை எறிவதாக இருக்கலாம், அதைக்கூட மேற்கிந்திய தீவுகளின் எட்வர்ட் செய்து கொண்டுதான் உள்ளார். ஆனால் மற்றொரு வகையில் மலிங்கா பிரபலம்.

Tamilnadu coconut loaded autos is the inspiration for Malinga's hair style?

ஆம்.. அவர் எறியும் பந்தைவிட அவர் பந்து தூக்கிக் கொண்டு ஓடிவரும்போது அலுங்கிக் குலுங்கி ஆடும் அந்த முடிக்கற்றைகள்தான் ரசிகர்களை மிகவும் கவரும் ஒரு விஷயம். மலிங்காவின் முடி அலங்காரம் மிகவும் வித்தியாசமாக இருக்க இன்ஸ்பிரேஷன் வேறு எதுவுமல்ல, நம்மூர் குட்டியானை ஆட்டோக்கள்தான் என்றால் அது மிகையல்ல (!).

இந்த படத்தை பாருங்களேன்.. மலிங்கா மண்டைக்கும், தேங்காய் ஏற்றிச் செல்லும் நம்மூர் ஆட்டோவின் கொண்டைக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருப்பது போல தெரியவில்லையா. அந்த வித்தியாசம் இதுதான்.. இரண்டிலுமே மையப்பகுதிக்கு இருபுறமும்தான் அதிகப்படியான லக்கேஜ் தொங்கிக் கொண்டுள்ளது.

கற்றுக்கொடுப்பது என்னவோ நம்மூர்காரர்கள்தான், ஆனால் தேங்காய் மண்டையை வைத்துக் கொண்டு மலிங்கா, பெயரை தட்டிச் சென்றுவிட்டார் பாருங்கள். இப்போது புரிஞ்சிருக்குமே உங்களுக்கு.. நாட்டுல உள்ள அறிவாளிங்க பூரா நம்மூர்லதான்யா இருக்காய்ங்கன்னு...

இதை நாம சொல்லல.. வாட்ஸ் ஆப்பில்தான் சிலர் இப்படிப் போட்டுக் கலாய்த்துக் கொண்டுள்ளனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+