திமுக தலைவர் கருணாநிதியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!
திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்தார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி முன்புபோல் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அறிவாலயம், முரசொலி அலுவலகம் என வரும் கருணாநிதி தொண்டர்களை சந்திக்கிறார்.

கருணாநிதி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவது அவரது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது அரசியல் கட்சித் தலைவர்களும் கருணாநிதியை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்ற திருநாவுக்கரசர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications