போதைல பேசாதீங்க சார்.. கமல் பற்றி மதுகுடிப்போர் சங்கம் மட்டமான போஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kamal Speech about his political move-Oneindia Tamil

சென்னை: நடிகர் கமலின் அரசியல் பிரவேச அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அவருக்கு வித்தியாசம் போஸ்டர் ஒன்றை அடித்து இருக்கிறது. அதில் நடிகர் கமல்ஹாசனிடம் நிதானமாக இருக்கும் படியும், குடித்துவிட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக வைரலாக இருக்கும் சங்கம் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஆகும். மதுக் குடிப்பவர்களுக்கு தனி உரிமையும், நிறைய சலுகைகளையும் ஏற்படுத்தும் வண்ணம் இந்த சங்கம் இயங்கி வருகிறது. இது மதுவுக்கு எதிராகவும் பேசி வருகிறது.

Tamilnadu Drinkers Awareness Society about for Kamalhassan

இந்த நிலையில் தற்போது இந்த சங்கம் நடிகர் கமல்ஹாசனுக்கு போஸ்டர் ஒன்று அடித்து இருக்கிறது. அதில் கமலின் அரசியல் பிரவேச அறிவிப்பை அந்த சங்கம் கிண்டல் செய்யும் விதமாக எழுதி இருக்கிறது.

அதன்படி அந்த போஸ்டரில் ''சரக்கடிக்கிற ஆட்கள் நாங்க 61.4 சதவிகிதம் இருக்கோம். அவசரப்பட்டு எதுவும் முடிவு பண்ணாதீங்க. சரக்கடிக்காமல் சமாதானத்துக்கு வந்த அப்பறம் முடிவு பண்ணுங்க. அப்பறம் எங்க முடிவை நாங்க சொல்லுறோம்'' என்று எழுதி இருக்கிறது.

கமலின் அரசியல் எண்டரி குறித்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் இந்த போஸ்டர் இருக்கிறது. இந்த போஸ்டரில் இருக்கும் வசனம் காரணமாக தற்போது இது வைரல் ஆகி இருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Drinkers Awareness Society letters to Kamalhassan. It asks Kamal not to take any decision while being a drunken.
Please Wait while comments are loading...