ஈரான் அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்பு.. கடலோர காவல்படை அசத்தல்!

ஈரான் அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழக பதிவெண் கொண்ட மீன்பிடி படகு ஒன்று 9 மீனவர்களுடன் நடுக்கடலில் தத்தளிப்பதாக இந்திய கடற்படை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

Tamilnadu fisherman tracking in middle of the sea near Iran

சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஈரான் அருகே அந்த படகு தத்தளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. படகு திசை மாறி சென்றதாக தெரிகிறது.

மீனவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் மீனவர்கள் அவசர அழைப்பு விடுத்திருப்பதாகவும் இந்திய கடற்படை தெரிவித்தது.

படகின் என்ஜின் அறையில் அதிகளவு கடல்நீர் புகுந்துள்ளதால் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை தகவல் அளித்ததை அடுத்து தமிழக கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்க விரைந்தனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 9 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+