ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயார்.. அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் குழுவுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் நள்ளிரவில் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும். உங்கள் போராட்டத்தை எங்கள் போராட்டமாக அரசு நினைக்கிறது. அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு குறித்து 24 மணிநேரத்திற்குள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
மேலும் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச்சட்டம் கொண்டு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications