தனியார் பள்ளிகளுக்கு நிகராக சீருடைகள்... தமிழக அரசு அறிமுகம்!
தனியார் பள்ளிகளுக்கு இணையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடைகளை அரசு அறிமுகம் செய்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல், இளஞ்சிவப்பு நிறத்திலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கரு நீலத்திலும் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் மாணவர்களின் சீருடைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றம் செய்து வருகிறது. பாடத்திட்டங்கள் மாற்றம் செய்தோடு நின்றுவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் அரசு மாற்றம் செய்ய முடிவு செய்தது.

இதன்படி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் முழுகால்சட்டையும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும். மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிற மேல்கோட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் முழுகால்சட்டையும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும். மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிற மேல்போட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கரு நீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டையும் அணி வேண்டும். மாணவிகள் கூடுதலாக கருநீலக் கோடிட்ட மேல் கோட்டும் அணிய வேண்டும்.
மாணவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே இந்த புதிய சீருடைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய சீருடைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம். #TNEducation pic.twitter.com/7SpSiePbSl
— K.A Sengottaiyan (@KASengottaiyan) April 7, 2018
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications