தமிழக அரசு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.. சர்டிபிகேட் கொடுக்கும் சசி கணவர் நடராஜன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட நாளிலேயே அடுத்த கட்சியின் அடுத்த தலைமைக் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலாவின் கணவர் நடராஜன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு குடும்ப அரசியல் செய்வோம், எங்களால் தான் ஜெயலலிதா அரசியலில் இருந்தார் என்பது உள்ளிட்ட கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பினார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதியபார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல் நலம் தேறிய நிலையில் நடராஜன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

தன்னிச்சையாக செயல்படவில்லை

தன்னிச்சையாக செயல்படவில்லை

அப்போது பேசிய அவர், அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளார். அவர்கள் கலந்தாலோசித்தே செயல்படுவதாக நடராஜன் கூறியுள்ளார்.

அதிகாரிகளை மாற்ற வேண்டும்

அதிகாரிகளை மாற்ற வேண்டும்

மேலும் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருக்கும் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாரிகளை மாற்றுவதன் மூலம் பணிகள் விரைந்து நடக்கும் என்றும் கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை

சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை

தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் இருப்பதால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறினார். மத்திய அரசு மாநிலத்துக்கான மானியத்தை நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரமாக செயல்படுகின்றனர்

சுதந்திரமாக செயல்படுகின்றனர்

அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார். இருப்பினும் ஜெயலலிதாவின் கண் அசைவு இல்லாததால் அமைச்சர்கள் ரிலாக்ஸாக செயல்படுவதாகும் அவர் நடராஜன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala husband Natarajan says that Tamilnadu government is going in a right way. ministers are free to act he said.
Please Wait while comments are loading...