தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
தமிழக அரசு இன்று 16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசு இன்று 16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம்:
1. தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை ஏடிஜிபி சிறப்பு அதிகாரியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் சென்னையில் காலியாக இருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு ஏடிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபி சிறப்பு அதிகாரியாக இருந்த சு.அருணாசலம் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. காவல் பயிற்சி ஐஜியாக இருந்த பி.நாகராஜன் சென்னை வடக்கு மண்டலத்துக்கு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. சென்னை வடக்கு மண்டல ஐஜியாக இருந்த சி.ஸ்ரீதர் சென்னை கிரைம் சிஐடி பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. சென்னை கிரைம் சிஐடி பிரிவு ஐஜியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் தெற்கு, கிரேட்டர் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. தெற்கு, கிரேட்டர் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜியாக இருந்த டாக்டர் எம்.சி.சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
7. டிஜிபி அலுவலகத்தில் ஸ்தாபன ஐஜியாக இருந்த டாக்டர் ஆர்.தினகரன் வடக்கு மற்றும் கிரேட்டர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. வடக்கு கிரேட்டர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த எச்.எம்.ஜெயராம் டிஜிபி அலுவலக ஸ்தாபனத்தின் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. குற்ற ஆவணக் காப்பகத்தில் ஐஜியாக இருந்த சுமித் சரண் சென்னை அமலாக்கத்துறையில் காலியாக இருந்த ஐஜி பதவிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. சென்னை மேற்குப் பகுதி லஞ்ச ஒழிப்பு மற்று கண்காணிப்புத் துறை எஸ்பி எச்.ஜெயலட்சுமி சென்னை பொருளாதார குற்ற விசாரணை பிரிவு சிஐடி எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11. சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த பி.தங்கதுரை சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. சேலம் நாகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த ஜி.சுப்புலட்சுமி சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
13. சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை ஐஜியாக இருந்த எம்.விஜயலட்சுமி சென்னை தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14. சென்னையில் தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவு எஸ்பியாக இருந்த பி.ஆர்.வெண்மதி சென்னை ஆவடி ரெஜிமண்ட்டல் செண்டர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கம்மாண்ட்டண்ட் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
15. தமிழ்நாடு சிறப்பு போலீஸ் ஆவடி ரெஜிமண்ட்டல் செண்டர் கம்மாண்டண்ட் வந்திதா பாண்டே மத்திய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
16. மத்திய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு எஸ்பியாக இருந்த ஷியாமலா தேவி சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications