திருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையான் பக்தர்களே.. தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷல் பஸ் ரெடி
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு வரும் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்தியாவின் பணக்கார கடவுளை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். வழக்கமாக புரட்டாசி, மார்கழி மாதங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதிக்கு 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக சென்னை, மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு திருப்பதி, திருமலையில் 2 முறை பிரம்மோற்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு 17ஆம்தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பஸ்களுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.tnstc.in tnstc, official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications