காந்திக்கு இது எத்தனையாவது நினைவு நாள் என்று கூட தெரியலையே தமிழக அரசுக்கு!!
காந்தியடிகளின் 69வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு கொடுத்த விளம்பரங்களில் 70வது நினைவுதினம் என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் 69 நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகளில் 70வது நினைவுதினம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 69வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் காந்தியடிகளின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காந்தியடிகளின் நினைவுநாள் தொடர்பாக தமிழக அரசின் செய்தி -மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள விளம்பரங்களில் 70வது நினைவு நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேச தந்தை காந்தியடிகளின் நினைவு நாளை மாநில அரசே தவறாக குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications