சிபிஎஸ்இ பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளும் அங்கீகார சான்று பெற வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

தமிழக அரசு மேல்முறையீடு
வழக்கில் தனி நீதிபதி மகாதேவன் தமிழக அரசின் அரசாணைக்கு கடந்த ஜூலை 10 - ம் தேதி தடை விதித்திருந்தார். அரசாணை தடைக்கு எதிராக தமிழக அரசு ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

தனிநீதிபதி உத்தரவு ரத்து
அரசின் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை தள்ளுபடி செய்தது.

சான்று பெறவேண்டும்
மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரமும் தமிழக அரசுக்கு உண்டு என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.

தலையிடமாட்டோம்
கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதில் தலையிடமாட்டோம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

அங்கீகாரம் அளிக்க
அதே நேரத்தில் பள்ளிகளை ஆய்வு செய்யவும், அங்கீகாரம் அளிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications