பட்ஜெட்.. கொரோனா.. தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய விஷயங்களை ஆலோசிக்க திட்டம்!
தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை நடக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.
தமிழக அரசு 2020-2021 பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தயார் ஆகி வருகிறது. இதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த மாதம் ஜனவரி 20-ந் தேதி நடைபெற்றது.
அதன்பின் இரண்டாவது கூட்டம் இன்று நடக்க்கிறது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும் பேச இருக்கிறார்கள். அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.
இது போக, இன்னொரு பக்கம் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்தும் இதில் ஆலோசனை செய்ய உள்ளனர். இதனால் இன்று நடக்கும் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications