தமிழக பாஜக கூட்டணியில் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடர்கிறது: சதக்கத்துல்லா
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடர்ந்து நீடிக்கும் என்று அதன் தலைவர் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை உறுதி செய்வதற்காக பாஜக தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்துள்ளார்.

தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அவரை, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் சதக்கத்துல்லா சந்தித்து கூட்டணி குறித்து பேச்சவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பிரகாஷ் ஜவடேகரும், சதக்கத்துல்லாவும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடர்கிறது என்று சதக்கத்துல்லா தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக . கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவினை ஏற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சதக்கத்துல்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இதேபோல் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரையும் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடனிருந்தார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications