ஊழல் புகார்.. ராமமோகன் ராவ் பதவி நீக்கம்.. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்!
தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அப்பதவியிலிருந்து தமிழக அரசு இன்று நீக்கியுள்ளது. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது மகன் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமைச் செயலாளர் ஒருவரிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்க கோரிக்கைள் வலுத்தன.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அப்பதவியிலிருந்து தமிழக அரசு இன்று நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நில நிர்வாகத்துறை ஆணையாளராக பதவியிலுள்ளார். இந்த பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
ஆளுநர் உத்தரவுப்படி பொதுத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் 1981ம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு அணி ஐஏஎஸ் அதிகாரியாகும். ஐஏஎஸ் அதிகாரியாக 30 வருட காலம் பணியாற்றியவர். பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். நல்வாழ்வுத்துறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் என்ற நற்பெயரை ஈட்டியவர்.
புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்! pic.twitter.com/h1gXf9Ccc3
— Oneindia Tamil (@thatsTamil) December 22, 2016
இதனிடையே கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தின் மூலம்,மத்திய அரசின் பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு திட்டத்தில் அக்கறையாக பணியாற்றுபவர் சக்திகாந்த தாஸ். எனவே மோடிக்கு நெருக்கமான அவரை தலைமைச் செயலாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக யூகங்கள் உலா வந்தன. ஆனால் ரூபாய் விவகாரத்தில் அவர் பிஸியாக இருப்பதால் அவரை தமிழக தலைமைச் செயலாளராக கொண்டுவரும் முடிவை மத்திய அரசு கைவிட்டதாக கூறப்படுகிறது. கிரிஜா வைத்தியநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications