தமிழக மக்கள் குடும்ப அரசியலை ஏற்கமாட்டார்கள்.. நடராஜனுக்கு, இல.கணேசன் பதிலடி
கட்சியில் குடும்பமாக இருக்கலாமே தவிர, ஆட்சியில் குடும்ப அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள், என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.
திருவையாறு: குடும்ப அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.
தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்க, திருவையாறு வந்திருந்த பாஜக ராஜ்யசபா எம்.பி. இல.கணேசன் தெரிவித்ததாவது:

கட்சியில் குடும்பமாக இருக்கலாமே தவிர, ஆட்சியில் குடும்ப அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள். அது தமிழகமாக இருந்தாலும், உத்தரபிரதேசமாக இருந்தாலும் ஆட்சியில் குடும்ப அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது தேவையற்றது. ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, நாங்கள் குடும்ப அரசியல்தான் நடத்துகிறோம் என கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இல.கணேசன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், குடும்ப அரசியலை துக்ளக் எதிர்க்கும் என கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி











Click it and Unblock the Notifications