பிளஸ் டூ தேர்வு முடிவு மே 9ல் வெளியாகிறது?
சென்னை: பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒருவழியாக முடிவடைந்ததை அடுத்து பொதுத்தேர்வு முடிவு மே 9-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 30 வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் 67 மையங்களில் நடந்து முடிந்துள்ளது. திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக பதிவு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதிப்பெண் விவரங்கள் மே 1ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மே 9ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications