புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்!
சென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியானதை தொடர்ந்து தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இடமாற்றம்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

புழல் சிறை வார்டன்கள்
புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை வார்டன்கள் விஜயராஜ் ஊட்டிக்கும், கணேசன் செங்கத்துக்கும், வார்டன்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் மத்திய சிறைக்கும், சுப்பிரமணி திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தில் பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு உத்தரவு
இதைத் தொடர்ந்து பாளை, மதுரை ஆகிய சிறைகளிலும் போலீஸார் கைதிகளிடம் தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நிலையில் புழல் சிறையின் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறைக்கு மாற்றம்
இதன்படி, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம்
சேலம் சிறை கண்காணிப்பாளரான ஆண்டாள், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி சிறை கண்காணிப்பாளரான நிகிலா நாகேந்திரன், கடலூர் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சிறை
அதேநேரம், கோவை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பதவிஉயர்வு பெற்று, கோவை சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசனுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டு, திருச்சி சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications