தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியல் வெப்பம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications