7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையிலும் பெய்யும்.. ஸ்வீட் தகவல்
சென்னை: தலைநகர் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், நாகை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் மழை குறைந்து வடகிழக்கு பருவமழை நிறைவடைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை மேலும் சில நாட்கள் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 3 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 2 செ.மீ, சேலம் தம்மம்பட்டியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications