கூட படிக்கும் மாணவிகள், தாய் குளியல் வீடியோவை வெளியிட்ட தஞ்சை மாணவர்.. பெங்களூர் போலீசில் சிக்கினார்
Recommended Video

பெங்களூர்: தமிழகத்தை சேர்ந்த பெங்களூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவிகள், அவர்கள் தாய் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் அப்லோடு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர், பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ளது சூடசந்திரா என்ற பகுதி. இங்குள்ள தனியார் பொறியில் கல்லூரியில் படித்து வருபவர் சித்தார்த் (21).
தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சித்தார்த், பெங்களூரில் தங்கியிருந்து, படித்து வந்தார்.

கொடூரம்
ஆனால், படிப்போடு சேர்த்து, சில்மிஷ வேலைகளையும் ஆரம்பித்துள்ளார் சித்தார்த். உடன் படிக்கும் ஒரு மாணவியுடன் நெருக்கம் வளர்த்துக் கொண்ட சித்தார்த் அவரை வைத்து, கொடூரமான செயல்களில் இறங்கிவிட்டார். அப்படி என்ன செய்தார் என கேட்கிறீர்களா? தனது உடன் படிக்கும் மாணவிகள் தங்கியுள்ள ஹாஸ்டல் அறைகளில் செல்போன் கேமராவை வைத்து அவர்கள் குளிக்கும் காட்சிகளை, உடை மாற்றும் காட்சிகளை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளார் சித்தார்த்.

உதவி செய்த சக மாணவி
லேடீஸ் ஹாஸ்டலில் எப்படி செல்போனை வைத்து சித்தார்த் வீடியோ எடுத்தார் என்ற கேள்வி எழலாம். அங்குதான், அவரது தோழி உதவி செய்துள்ளார். அவரும் ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கிறார். பெண் என்றும் பாராமல், சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்தது சித்தார்த்தின் தோழிதான். அந்த வீடியோவை சித்தார்த்திற்கு அவர் அனுப்புவது வழக்கமாம்.

நிர்வாண வீடியோ
வகுப்பில் கூட படிக்கும் பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் குளிக்கும் வீடியோக்களை ஃபேக் பேஸ்புக் ஐடிகளை ஓபன் செய்து, சம்மந்தப்பட்ட பெண்களின் பேஸ்புக் பக்கத்தின் கமெண்ட்ஸ் பகுதியில் போஸ்ட் செய்வது வழக்கமாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பரப்பன அக்ரஹாரா போலீசில் புகார் அளித்தார். போலீசாரும், அதுபோன்ற பேஸ்புக் ஐடியில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் குற்றவாளி யார் என்பது அப்போது தெரியவில்லை.

தஞ்சாவூர் ஐபி அட்ரஸ்
இந்த நிலையில் சமீபத்தில் மாணவியின் தாய் வெளியூரிலிருந்து இங்கு வந்து மகளுடன் சில நாள் ஹாஸ்டலில் தங்கியுள்ளார். அவர் குளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் சித்தார்த். எனவே மீண்டும், ஒரு மாணவி போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். இதையடுத்து, தீவிர விசாரணை நடத்தியபோது, போலி பேஸ்புக் ஐடிகள் தஞ்சாவூரிலுள்ள ஐபி எண்ணில் இருந்து ஆபரேட் ஆவது தெரியவந்தது. அது சித்தார்த்தின் உறவுக்காரர் வீட்டு ஐபி அட்ரஸ். அந்த ஐபி அட்ரசை வைத்து, சித்தார்த் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். உதவி செய்த தோழியை இன்னும் கைது செய்யவில்லை. இவரின் நோக்கம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications