கள்ளை விட மது சிறந்தது என நிரூபிக்கத் தயாரா?.. வைகோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி நல்லசாமி சவால்
ஈரோடு : மதுபானங்கள், கள்ளை விட, சிறந்தவை என்பதை நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நல்லசாமி கூறியதாவது..

சேலத்தில், 7 ம் தேதி, காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி சடங்கு நடந்தது. அஞ்சலி கூட்டத்தில் இரங்கல் உரையாற்றிய, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, "ம.தி.மு.க. ஒருபோதும் கள்ளை ஆதரிக்காது.
பூரண மதுவிலக்கை பற்றி தான் பேச வேண்டும். கள் ஆதரவாளர்கள் வந்திருக்கிறார்கள். கள்ளை பற்றி எவரும் வாய் திறக்க கூடாது' என்றார்.
கடந்த காலங்களில் கள்ளுக்கு ஆதரவாக, ம.தி.மு.க., செயல்பட்டு வந்துள்ளது. அரசு நியமித்த நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு, ஆறு இடங்களில் மக்கள் கருத்துக்களை
கேட்டறிந்தது.
அப்போது, எம்.பி.,யாக இருந்த கணேசமூர்த்தி, கள்ளுக்கு விதித்து இருக்கும் தடையை நீக்க கோரி, கருத்துக்களை பதிவு செய்துள்ளார். கட்சியினரும் அவ்வாறே கருத்துக்களை பதிவு
செய்துள்ளனர். ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் கள்ளுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கள் இயக்கத்தின் கோரிக்கையில் நியாயமே இல்லை. டாஸ்மாக் மதுவும், வெளிநாட்டு இறக்குமதி மதுவும் கள்ளை விட நல்லவை என்பதை நிரூபித்தால், கோரிக்கைகளை கைவிடுகிறோம்.
போராட்டத்தை விலக்கி கொள்கிறோம்.
இதுகுறித்து, 10 நாட்களுக்குள் வைகோவுடன் விவாதம் நடத்த கள் இயக்கம் விரும்புகிறது. பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம். இவ்வாறு. அவர் கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications