தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video

சென்னை: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வடமாவட்டங்களில் லோசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது குமரி பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதனால் ஈரப்பதம் உள்ள காற்று தொடர்ச்சியாக வீசியப்படி உள்ளது. இதனால் கேரளாவுடன் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் மழை நீடிக்கும். இது நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் நிலவும் வெயில் காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் மழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். சில இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தென்மேற்குப் பருவமழை தமிழகத்திற்கு குறைவான மழைப் பொழிவையே தந்துள்ளது. இதுவரை 16 செமீ பெய்திருக்க வேண்டிய சூழலில், 13 செமீ மழை மட்டுமே பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications